விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இன்று ஜூன் 13 வைகாசி மாத கடைசி வெள்ளியும், மாதாந்திர வெள்ளியுமான இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் மொட்டை மற்றும் காது குத்து வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு இளநீர், பால், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு விருதுநகர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சிவகாசி போன்ற ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.