இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் குருநாதன், செண்பகவேலவன் ஆகியோர் தலைமையில் போலீசார் வெம்பக்கோட்டை, தாயில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதியில் சோதனை நடத்தினார்கள். இதில் பலர் காட்டுப்பகுதியிலும், வீட்டின் பின்பகுதியிலும் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட கலைஞர் காலனியை சேர்ந்த ரோஜா, ஸ்டெல்லா மற்றும் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த கணேசன் ஆகிய மூன்று பேர்களிடமிருந்து பேன்சி ரக வெடிகள், கருந்திரிகள், ஒத்த வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்