விருதுநகர்: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது. கோட்டையூர், ஓம்சக்தி நகர், பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக வெடிகள், கருந்திரி தடுப்பு நடவடிக்கைக்காக தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பசும்பொன்நகர் தகரசெட்டில் சந்தேகத்திற்குரிய முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக தகரசெட்டை சோதனை செய்தனர். 

அப்போது அங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தங்கராஜ், செந்தில், மாரிச்செல்வம் ஆகியோர் மீது வருவாய்துறையினர் வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தார். சட்டவிரோதமாக தயார் செய்து பெட்டிகளில் இருந்த சரவெடிகள், 20 குரோஸ் கருந்திரி மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி