சாத்தூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்... போக்சோவில் தந்தை கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது தொழிலாளி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்தார். மேலும் அவர் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சிறுமி வயிற்று வலி காரணமாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். 

சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவலை சிறுமி தெரிவித்து உள்ளார். அதாவது, சிறுமியை அவரது தந்தையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி