விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், சூது பவள மணி, சுடுமண் மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்ட 3500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அரியவகையான அகெட் வகை கல்மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டுபடிக்கபட்டுள்ளன. இதன் மூலம் தொன்மையான மனிதர்கள் விலைமதிப்பற்ற அகெட் போன்ற அணிகலன்களை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளர்.