சாத்தூர்: பொதுப்பாதையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி சாலை மறியல்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையப்பட்டி ஊராட்சி கோவிலூர் கிராமத்தில், மயானத்திற்கு செல்லும் பொதுப்பாதை தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பாதையை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி