விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முக்கியத்துவம் குறித்து கோட்டாட்சியர் கனகராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பி.எல்.ஓ.க்கள் மற்றும் பொறுப்பாளர்களின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை சரிசெய்து, தகுதியான அனைவரையும் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.