விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புதிய மின்மாற்றி அமைக்க கோரி கிராம மக்கள் வெம்பக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.