விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ், தனது ஆதரவாளர்களுடன் சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, தங்கள் பகுதிக்குத் தேவையான பிரச்சனைகள் குறித்த மனுவை சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜிடம் பொதுமக்கள் வழங்கினர்.