விருதுநகர் சந்தையில் அத்யாவசிய பொருட்களின் விலை நிலவரம்

விருதுநகர் சந்தை: கடலை எண்ணெய், பாமாயில், முண்டு வத்தல் விலை குறைவு விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், பாமாயில், முண்டு வத்தல் ஆகியவற்றின் விலை குறைந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ. 2550 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ. 50 குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, டின் ஒன்று ரூ. 2500 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பாமாயில் 15 கிலோ கடந்த வாரம் ரூ. 2180க்கு விற்பனையானது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ. 5 மட்டும் குறைந்துள்ளது. எனவே, டின் ஒன்று ரூ. 2175 என விற்கப்படுகிறது. முண்டு வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ. 19ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ஆரம்ப கட்ட விலையில் ரூ. 9ஆயிரம் வரை குறைந்துள்ளது. மேலும் உயர்ந்தபட்ச விலையில் ரூ. 3 ஆயிரம் குறைந்துள்ளது. எனவே, ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ. 4400க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ. 100 குறைந்துள்ளது. எனவே, ரூ. 4300க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி