இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில் முன்பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மது போதையில் முதியவர் ஒருவரைத் தாக்கியதாகவும் அதைத் தட்டிக்கேட்க முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு ஜெகதீசனுக்கு கைகலப்பு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அந்த சம்பவத்தின் முன்விரோதம் காரணமாக ஜெகதீசன் மதுரையைச் சேர்ந்த தனது 4 நண்பர்களை வரவழைத்து பெட்ரோல் குண்டு வீசச் செய்ததும் தெரிய வந்துள்ளது. ஜெகதீசனிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் மற்ற 4 பேரைத் தனிப்படை அமைத்து தேடி வருகின்ற்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது