விருதுநகர்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அரங்கநாதன் இவர் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் உள்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மனோகரன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டு எண்கள் எழுதப்பட்டிருந்த வெள்ளை பேப்பர் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.10,000 ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி