இந்த விபத்தில் அருள்மொழியின் உறவினர் ஸ்டாலின் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வேனில் காயத்துடன் சிக்கியிருந்த நபர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?