மக்கள் நலக்கூட கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். சாத்தூர் அருகே முத்தாண்டியாபுரம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மக்கள் நலக்கூட கட்டிடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், கிருஷ்ணகுமார், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி