நாளும் ஒவ்வொரு மண்டபத்திலும் உபயதாரர்கள் விழாவாக தினமும் அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருள்களால் அபிஷேகத்துக்குப் பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தினமும் இரவில் மாரியம்மன் பல்லக்கில் அமர்ந்து சாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் வீதி உலா வருவார். பங்குனி பொங்கல் எட்டாம் நாளான இன்று பக்தர்கள் அம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். பங்குனி பொங்கலின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடுநிசி வேளையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?