கிணற்றில் விழுந்த ஆண் மான் மீட்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பனையடிபட்டி கிராமத்தில் விவசாயக் கிணற்றில் உணவு தேடி வந்த மான் தவறி விழுந்தது. கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் அளித்த தகவலின் பேரில், ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மானை உயிருடன் மீட்டனர். பின்னர், சிவகாசி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு வயது ஆண் மான் பத்திரமாக மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி