விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கண்குடி நீர்த்தேக்கத்தின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 17.02.2026 நடைபெறவுள்ள இந்த குத்தகை உரிமையை எடுக்க விருப்பம் உள்ளவர்கள், www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.