சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடுமா அல்லது திமுக சின்னத்தில் போட்டியிடுமா என்பதை கட்சியின் தலைமைதான் முடிவெடுக்கும் என துரை வைகோ பேசினார். தனிச் சின்னத்தில் போட்டியிடுவது இயக்கத் தோழர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்றும், தற்போதைய குழப்பமான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டோம் என்றும் துரை வைகோ கூறினார்.