மேலும் எந்த மொழி மூத்த மொழி என்பதை பேச வேண்டியதில்லை எனவும் இந்த வெறுப்பு அரசியலை பாஜகவும் ஆர்எஸ்எஸ்வும் செய்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எந்த மொழி சிறந்தது என்பதை நிர்ணயிக்க வேண்டியது அரசியல்வாதிகள் அல்ல எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தான் என்றார். மேலும் கீழடியில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வில்லை என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என விமர்சனம் செய்தார். மேலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கிருந்து தமிழுக்கு குரல் கொடுப்பதை விட கர்நாடகாவில் சென்று குரல் கொடுக்க வேண்டும் எனவும் பொறுப்போடு அரசியல் செய்ய வேண்டும் என்றார்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்