காங்கிரஸ் மேலிட பார்வையாளர் பிஸ்வ ரஞ்சன் மொகந்தி பேட்டி

விருதுநகரில் இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய "அமைப்பு மறுசீரமைப்பு இயக்க" கூட்டம், மேலிட பார்வையாளர் பிஸ்வ ரஞ்சன் மொகந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மொகந்தி, கட்சிக்குள் புதிய அமைப்பை உருவாக்க ஜனநாயக, ஆலோசனையான, அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான செயல்முறையை காங்கிரஸ் தொடங்கியுள்ளது என்றார். இந்த சங்கதன் சிருஜன் அபியான் (அமைப்பு உருவாக்கப் பிரச்சாரம்) மூலம், காங்கிரஸ் சித்தாந்தம், ஜனநாயகம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், நீதி, உண்மை, சமுதாயம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தில் இணையலாம் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி