விருதுநகர்: கடன் பெற விண்ணப்பிக்கலாம்; வெளியான தகவல்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக்கூறுகள் சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. 

2025-2026 ஆம் நிதியாண்டில் ரூ. 200 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். 

தனிநபர் கடன் திட்டம் சிறுவர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிகபட்சமாக ரூ. 25 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ. 25 இலட்சம் வரையும் குழுவொன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 25 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி