வாடகை சொத்து வரி ஆகியவற்றை கோவில் நிர்வாகத்திடமும் தொழில் வரியை நகராட்சியிலும் செலுத்தி வருகின்றனர். நேற்று காலை திடீரென சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் ஏற்றும் வாகனத்தில் ஜப்தி வாகனம் என்னும் சிறு அறிவிப்பு பதாகையுடன் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தின் வாசலில் இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 18.03.2025 ரசீதில் ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சீட்டையும் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது. வரி வசூல் செய்வதற்கு இதுபோன்று கழிவுநீர் வாகனத்தை கடைக்கு முன்பாக இடையூறாக நிறுத்தி வைத்து நகராட்சி நிர்வாகம் அடாவடி செய்து வருவது வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு