விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார். பழுதடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், தாயில்பட்டியில் 15ஆவது மானியக்குழு நிதியில் ரூ. 41.35 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையத்தையும் அவர் பார்வையிட்டார்.