விருதுநகர்: தேவாலயத்தில் புகுந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் பாம்பு இருப்பதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், அந்தப் பாம்பை வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி