விருதுநகர்: வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் முத்துலட்சுமி என்பவரது வீட்டில் சமையலறையில் பாம்பு புகுந்ததாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் சென்ற வீரர்கள், வீட்டில் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி