விருதுநகர்: கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து (VIDEO)

நெல்லையில் இருந்து பெங்களூருக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை கண்டைனர் வாகனத்தில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லும் தனியார் கண்டைனர் வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நேற்று நள்ளிரவில் கண்டைனர் வாகனம் சாத்தூரை அடுத்த எட்டூர்வட்டம் அருகே சென்று கொண்டிருக்கும் போது வாகனத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது. இதையடுத்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி அருகில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சாத்தூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கண்டைனரில் உள்ள இரண்டு கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி