விருதுநகர்: பழைய இரும்பு பொருட்கள் கடையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்த சங்கர் (42) என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், பாம்பை விரட்ட வைத்த தீ பரவியதால் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் மற்றும் வயர்கள் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி