மிளகாய் விளைச்சல்ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பனையடிபட்டி, கண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் அறுவடை தொடங்கி ஆறு மாதங்கள் வரை மிளகாய் பறிக்கலாம். கடந்த மாதம் வரை கிலோ 25-30 ரூபாய்க்கு விற்ற மிளகாய், தற்போது 45-48 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அன்பின் நகர விவசாயி சுந்தரமூர்த்தி கூறுகையில், இதுவரை நஷ்டம் ஏற்படாததால் தொடர்ந்து மிளகாய் பயிரிடப்படுகிறது. மிளகாய்கள் தென்காசி மாவட்டம் சுரண்டை, பாவூர்சத்திரம் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதால் கிலோ 45 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. உள்ளூர் சந்தையில் 20 ரூபாய் மட்டுமே கிடைப்பதால் வெளியூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி