சாத்தூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆர்டிஓ கனகராஜ் தலைமை வகித்தார். இதில், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்கள் பெற பழைய நடைமுறை பின்பற்ற வேண்டும், காட்டு பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் நாசம், டவுண் பஸ்கள் ஆர்டிஓ அலுவலக பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல வேண்டும், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாக பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வசதி, போத்திரெட்டிபட்டியில் கண்மாய் கரையோர பகுதிகளில் மின்விளக்கு, கு. சொக்கலிங்கபுரம் பகுதியில் மீன் விளக்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக் கொண்ட ஆர்டிஓ கனகராஜ், அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.