விருதுநகர்: வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை நீட்டிப்பு

தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம், கன்னியாகுமரி-சென்னை சிறப்பு ரயில்கள் வருகிற 14-ந்தேதி வரையும், திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் மேட்டுப்பாளையம்-நெல்லை, தாம்பரம்-நெல்லை, தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில்கள் வருகிற 16-ந்தேதி வரையும் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி