விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்துள்ள ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையின் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நரசிம்மவர்மன் என்ற அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா சக ஊழியர்கள் மூலம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மேளதாளம் முழங்க மாலை அணிவிக்கப்பட்டு ஆட்டம் பாட்டமுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பணி ஓய்வு பெறும் நரசிம்மவர்மனுக்கு சக ஊழியர்கள் சார்பாக பொக்லைன் இயந்திர பக்கெட்டில் மலர்கள் தூவி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.