ஏழாயிரம் பண்ணையில் எழுதா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழக துணைச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ராஜாசிங் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் சாத்தூர் நகரக்கழக செயலாளர் இளங்கோ, முன்னாள் மாவட்ட கழக துணைச் செயலாளர் பூபாலன், அமைப்புசாரா ஒன்றிய செயலாளர் கருப்பசாமி யாதவ் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி