விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி பேருந்து நிறுத்தப் பகுதியில் 75 வயது முதியவர் சடலமாக மீட்பு. காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மேலமடை கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிபவர் மாரீஸ்வரன் இவர் அலுவலகத்தில் இருந்தபோது இருக்கன்குடி பேருந்து நிறுத்தப் பகுதியில் 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.