விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில், சாத்தூர் நகர ஒன்றிய திமுக கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முக்குராந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரைராஜ் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிறந்தநாள் விழா கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.