விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் ரோட்டில், தாயில்பட்டி ஜங்ஷன் அருகே ஒரு டீக்கடைக்குள் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. இந்த விபத்தில் அருகிலிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி அக்கடை அருகே நின்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது. சாத்தூர் டவுன் காவல் நிலைய காவலர்கள் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.