விருதுநகர் மாவட்டம் காண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு வயது 27. இவர் செல்லத்துரை என்பவரிடமிருந்து 15,000 ரூபாய் வட்டிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்ந்து வட்டியைச் செலுத்தவில்லை எனக் கூறி, ராஜகுருவின் இருசக்கர வாகனத்தை செல்லத்துரை பறித்துச் சென்றதாகவும், வாங்கிய பணத்திற்கு அசல் மற்றும் வட்டியாக ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என செல்லத்துரை ராஜகுருவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ராஜகுரு அடித்த புகாரின் அடிப்படையில் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.