விருதுநகர்: துணிக்கடையின் பூட்டை உடைத்து துணிகள் திருட்டு

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது (49). இவர் அன்பில் நகரம் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மாலை கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 18,800 ரூபாய் மதிப்புள்ள புதிய துணிகள் திருடப்பட்டிருந்தன. 

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி