மேலும் குழந்தை கீழே விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இருக்கன்குடியில் விபத்து ஏற்பட்ட மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு ஷாக் அடித்ததாக மின்சார வாரியத்துக்கு பலமுறை புகார் அளித்தும் மின்சார ஊழியர்களின் அலட்சியம் காரணமாகவே 5 வயது குழந்தை சம்யுக்தா இறந்ததாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பவ நடத்தில் மின்வாரியம், வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.