கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார், கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஏர்செல் மற்றும் டிஷ்நெட் நிறுவனர் சிவசங்கரன் மற்றும் டாக்டர்கள் கோவிந்தராஜன், கண்ணன், கிருஷ்ணவேனி, சம்பத், ராஜேந்திரன், பத்மா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பேசும்போது, மனநிலை தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிற நேர்மறை எண்ணங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான். கடைமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி. அதை ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் செயலாக்கும் போது வாழ்வில் வெற்றியும் வளமும் வந்து சேரும் என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், பி. எஸ். ஆர். கல்விக்குழுமங்களின் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.