தென்னக ரெயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கோவில்பட்டி பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று (நவம்பர் 7) பாலக்காடு-திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரயில்கள் விருதுநகர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், நவம்பர் 8 முதல் 11 வரை 5 நாட்களுக்கு பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கடம்பூர் நிலையத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். இன்று (7ம் தேதி) இயக்கப்படும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குமாரபுரம் நிலையத்தில் காலை 11.50 மணி முதல் மதியம் 2.50 மணி வரை 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.