விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுச்சூரங்குடியில் வசிக்கும் சேதுவின் மனைவி மாரீஸ்வரி (25), தனது மகளுடன் குழாய் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றார். உணவு இடைவேளைக்குப் பிறகு மாரீஸ்வரியைக் காணவில்லை என சக தொழிலாளர்கள் தேடியபோது, அவர் குழாய் தயாரிக்கும் கம்பெனியில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.