ரத்த சுத்திகரிப்பு பிரிவு தொடக்கம்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் இன்று 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரத்த சுத்திகரிப்பு பிரிவைத் தொடங்கி வைத்தார். பயனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றும், ஒரு நாளைக்கு நான்கு பேர் பயனடைவார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி