ஆபத்தான நிலையில் பேருந்தின் பின்னால் உள்ள விளம்பரப் பலகை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், சாத்தூர் நோக்கிச் சென்ற அரசு மகளிர் விடியல் பேருந்தின் பின்புறம் விளம்பரப் பதாகை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட இருசக்கர வாகன ஓட்டி, உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்து பேருந்தை நிறுத்த வைத்தார். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இணைந்து ஆபத்தான நிலையில் தொங்கிய பதாகையை அகற்றி, பெரும் விபத்தைத் தடுத்தனர். இந்த இளைஞரின் சமயோசித செயலால் மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி