சாத்தூர்: கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் கிணற்றில் முத்துக்கனி (50) என்ற மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டாம் என கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி