சாத்தூர்: போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சாத்தூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு சாத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முனிசாயி கேசவன் தலைமை வகித்தார். போலீஸ் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். 

இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் சாத்தூர் ஸ்ரீ ராமசாமி நாயுடு நினைவு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பேரணியின் போது ரத்த தானம் செய்வதை குறித்தும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போலீஸ் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வரை பேரணியாக சென்றனர். 

மேலும் இந்த பேரணியில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்கு போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் விஜயகாந்த் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி