2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர களப்பணி மற்றும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் செல்லப்பிள்ளை சாத்தூர் ஆர். கே. ரவிச்சந்திரன் தலைமையில், வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை, ஆலங்குளம், சாத்தூர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.