அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சாத்தூர் K. K. நகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக அவைத் தலைவர் K. P. T. ஜெயபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் சாத R. K. ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிமுக தொடர்ந்து மக்களுக்காக செயல்படும் என்றும், கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களைத் தொடர்ந்து பணியாற்றிட முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி