சாத்தூர்: ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக சார்பில் 'ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தின் போது வருவாய்துறை அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக 'தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

பின்னர் கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக கடைபிடித்ததால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை குறைத்ததற்கு தண்டனையாக தமிழ்நாட்டில் உள்ள 39 எம்.பிக்களில் இருந்து 30 எம்பிக்களாக குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், வட மாநில மாணவர்கள் இந்தி மட்டுமே படிப்பதால் தமிழகத்தில் வேலை பார்ப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொண்ட நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் என பேசினார்.

தொடர்புடைய செய்தி