தேசிய சமூக நீதி கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய சமூக நீதி கட்சியின் சார்பில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சமூக நீதி கட்சியின் தலைவர் வெங்கடேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொண்டர்களிடம் சிறப்புரை ஆற்றினார். வரும் சட்டமன்ற தேர்தலின் போது கட்சியின் செயல் பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி