அங்கு அரசு அனுமதியில்லாமல் பட்டாசுகள் தயார் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த ரூ. 39 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்த முத்தால்நாயக்கன்பட்டியை சேர்ந்த வீரபாண்டி (49), சேர்மத்தாய் (40) சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்த ராஜகனி(48) ஆகியோரை கைது செய்தனர்.
அதே போல் நகர் காவல் நிலை சார்பு ஆய்வாளர் கேசவன் சித்தப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது வீட்டின் அருகே தகர செட் அமைத்து வரலட்சுமி (35), சீனிவாசன்( 42) ஆகியோர் அரசு அனுமதியில்லாமல் பட்டாசுகள் தயார் செய்வது கண்டுபிடித்து பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.